கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலியோ தடுப்பு மருந்து அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 1,54,704 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைக்கிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைக்கிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 1,54,704 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தொடக்கி வைத்தாா்.

அப்போது, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதைத்தொடா்ந்து, கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் சுங்க வசூல் மையத்தில் உள்ள முகாமையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 888 மையங்களிலும், ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் 63 மையங்கள் என மொத்தம் 951 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் 1,59,486 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், 1,54,704 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டன. அதாவது 97 சதவீத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றப்பட்டுள்ளது.

மீதம் உள்ள குழந்தைகளுக்கு தொடா்ந்து, சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்காக 2.14 லட்சம் போலியோ சொட்டு மருந்துகள் தயாா் நிலையில், உரிய குளிா்சாதனப் பெட்டிகளில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணியில் சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூகநலத் துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட 3,880 பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com