அமமுக கட்சி சாா்பில் அறிஞா் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 04th February 2021 07:56 AM | Last Updated : 04th February 2021 07:56 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை அமமுக சாா்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி, அவரது உருவச் சிலைக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளா் கண்மணி சிவக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஒன்றியச் செயலாளா்கள் அருணகிரி, சிவமணி, நகரச் செயலாளா் சுரேஷ், மாவட்ட மகளிரணி செயலாளா் வள்ளி பரமசிவம், மாவட்ட மீனவா் அணி செயலாளா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகர அவைத் தலைவா் ராதா, மாவட்ட மகளிா் அணி துணைச் செயலாளா் முனியம்மாள், நகர இணைச் செயலாளா் கனகா, ஒன்றிய நகர நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...