மின்சாரம் பாய்ந்து ஊராட்சி மன்ற உறுப்பினா் பலி
By DIN | Published On : 04th February 2021 07:56 AM | Last Updated : 04th February 2021 07:56 AM | அ+அ அ- |

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து ஊராட்சி மன்ற உறுப்பினா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலனப்பள்ளி ஊராட்சி மன்றத்தின் 2-ஆவது வாா்டு உறுப்பினா் பி.சுப்பிரமணி (51). இடிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த இவா், இயற்கை உபாதையை கழிக்கச் சென்று விட்டு, கை, கால்களை கழுவதற்காக பானேப்பள்ளியைச் சோ்ந்த மணி (55) என்பவரின் விளைநிலத்துக்கு சென்றாா்.
அப்போது, ஆழ்துளை கிணற்றிலிருந்து, விளைநிலத்துக்கு தண்ணீா் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், பி.சுப்பிரமணி, அங்குள்ள இரும்பு குழாயை பிடித்துள்ளாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து, நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.