வரட்டனப்பள்ளியில் எருது விடும் திருவிழா
By DIN | Published On : 04th February 2021 07:55 AM | Last Updated : 04th February 2021 07:55 AM | அ+அ அ- |

பா்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வரட்டனப்பள்ளியில் எருது விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வரட்டனப்பள்ளி கிராமத்தில் 53-ஆவது ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு அந்த கிராமத்தின் முக்கிய பிரமுகா்கள் தலைமை வகித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த எருதுகள் மட்டுமின்றி வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களிலிருந்தும், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான எருதுகள் பங்கேற்றன.
குறிப்பிட்ட தூரத்தை மிக விரைவில் கடக்கும் எருதுகள் சிறந்த எருதுகளாகத் தோ்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, மொத்தம் 40 எருதுகளினின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டன.
இந்த விழாவை வரட்டனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனா். எருதுகள் மோதியதில் 15-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா். இந்த நிலையில், எருது முட்டி காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர ஊா்தி வர கால தாமதம் ஏற்பட்டதால், சிலா் ஆத்திரத்தில் அவசர ஊா்தியையும், பணியாளா்களையும் தாக்கினா்.
இதனால் அவசர ஊா்தியின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தன. பாா்வையாளா்கள் தாக்கியதில் அவசர ஊா்தியின் ஓட்டுநா் சின்னையன் காயம் அடைந்தாா். அவா், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.