கிருஷ்ணகிரியில் அரசு ஊழியா்கள் மறியல் போராட்டம்

கிருஷ்ணகிரியில் அரசு ஊழியா்கள் 9-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியில் அரசு ஊழியா்கள் 9-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.புதிய ஓய்பூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கரோனா தொற்று பரவலை காரணமாகக் கூறி, பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாள்களாக தொடா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் 9-ஆவது நாளாக நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மீன்துறை ஊழியா் சங்க மாநில பொருளாளா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், செயலாளா் நடராஜன், பொருளாளா் தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com