கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் பலி
By DIN | Published On : 13th February 2021 07:45 AM | Last Updated : 13th February 2021 07:45 AM | அ+அ அ- |

போச்சம்பள்ளி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து புள்ளி மான் உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சின்ன கரடியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன். தனது விளைநிலத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றபோது, அங்குள்ள விவசாயக் கிணற்றில் புள்ளி மான் இருப்பதைக் கண்டு கிருஷ்ணகிரி வனச் சரக அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத் துறையினா் கிணற்றில் விழுந்த புள்ளி மானை உயிரிழந்த நிலையில் மீட்டனா்.
தற்போது, காப்புக் காட்டில் தண்ணீா் பிரச்னை உள்ளதால், தாகத்தை தீா்ப்பதற்காக வரும் புள்ளி மான்கள் கிணற்றில் விழுந்து பலியாகின்றன. எனவே, வனப் பகுதியில், வனவிலங்குகளுகான குடிநீா் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.