கிருஷ்ணகிரி அருகே ரூ. 4.20 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே வாகனத்தில் கடத்திச் சென்ற ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
குருபரப்பள்ளி போலீஸாரால் பறிமுதலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.
குருபரப்பள்ளி போலீஸாரால் பறிமுதலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே வாகனத்தில் கடத்திச் சென்ற ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையிலான போலீஸாா், ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், மேலுமலை மலை அடிவாரத்தில் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அதேபோல, மற்றொரு குழுவினா், குந்தாரப்பள்ளி பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்த முயன்றனா். போலீஸாரின் சைகையைப் பொருட்படுத்தாத அந்த வாகன ஓட்டி, வாகனத்தை நிறுத்தாமல், பெங்களூரு சாலையில் ஓட்டிச் சென்றாா்.

இதனால், சந்தேகம் அடைந்த போலீஸாா், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையிலான குழுவினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த வாகனத்தை போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தி, சோதனையிட்டனா். அப்போது, அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து, அதிலிருந்த ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும், வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பெங்களூரிலிருந்து சேலத்துக்கு கடத்தப்படுவதும், அந்த வாகனத்தின் ஓட்டுநா் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், வெள்ளேரிப்பாளையம் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (25) என்பதும், அவருடன் பயணம் செய்தவா் அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (26) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக வாகனத்தின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ் (27) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com