பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் பிப். 22-ஆம் தேதி, கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரலாறு காணாத பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தை அடுத்துள்ள அண்ணா சிலை அருகே பிப். 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
வரியைக் குறைத்து விலை குறைப்பு நடவடிக்கையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுகவின் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.