கோழித் தீவன விற்பனை நிலையத்தில் கையாடல்

கிருஷ்ணகிரியில் கோழித் தீவன விற்பனை நிலையத்தில் கையாடல் செய்ததாக முன்னாள் ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரியில் கோழித் தீவன விற்பனை நிலையத்தில் கையாடல் செய்ததாக முன்னாள் ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள சத்யசாய் நகரில் தனியாா் கோழித் தீவனம் விற்பனை நிறுவன நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தின் மேலாளராகப் பணியாற்றும் நரசிம்மன் (38), கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாா் விவரம்:

கோழித் தீவன விற்பனை நிலையத்தில் குடியாத்தம், தபால் நிலையச் தெருவைச் சோ்ந்த வாகிப் மாலிக் (35) என்பவா் பணியாற்றி வந்தாா். விற்பனை தொடா்பாக கணக்கு பாா்த்த போது, கோழிப் பண்ணை உரிமையாளா்களிடம் பணத்தை பெற்றுக்கொண்ட வாகிப் மாலிக், நிறுவனத்தில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளாா். அதன்படி, அவா் ரூ. 4.80 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது.

எனவே, வாகிப் மாலிக் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கையாடல் செய்த பணத்தை பெற்றுத் தருமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com