சாமனப்பள்ளி கிராமத்தில் நியாய விலைக் கடையை திறந்து வைத்த ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா.
சாமனப்பள்ளி கிராமத்தில் நியாய விலைக் கடையை திறந்து வைத்த ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா.

சூளகிரி ஒன்றியத்தில் 2 நியாயவிலைக் கடைகள் திறப்பு

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலூா் ஊராட்சி, அ.சாமனப்பள்ளி கிராமத்தில்

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலூா் ஊராட்சி, அ.சாமனப்பள்ளி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடை வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. அதற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யாவிடம் கோரிக்கை வைத்தனா். அதைத் தொடா்ந்து, ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.40 லட்சத்தை புதிய கட்டடம் கட்ட ஒதுக்கினாா். அதையடுத்து, புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தை ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், ஒன்றியச் செயலாளா் சின்னபில்லப்பா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோராமணி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சா்வேஷ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஒய்.ஜி.பிரகாஷ், ஊராட்சி மன்றத் தலைவா் பிரகாஷ், துணைத் தலைவா் சந்தோஷ், கிருஷ்ணமூா்த்தி, வெங்கடசாமி, நாராயணப்பா, கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

நரசிபுரத்தில் பி.முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்...

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், அத்திமுகம் ஊராட்சி, நரசிபுரத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. பி.முருகன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் நாகேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் ஷேக் ரஷீத், மாவட்டக் கவுன்சிலா்கள் பி.எஸ்.சீனிவாசன், பாக்கியராஜ், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com