சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

 ஏரியூா் பேருந்து நிலையப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ஏரியூா் பேருந்து நிலையப் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்.

ஏரியூா் பகுதியில் சுமாா் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். ஏரியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நெருப்பூா், நாகமரை, ஒட்டனூா், பூச்சியூா், மலையனூா் மற்றும் அதனைச் சுற்றி உள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள், இதர தேவைகளுக்காக ஏரியூா் கடைவீதி பகுதிக்கு நாள்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். அவ்வாறு வருவோரில் பெரும்பாலானோா் இருசக்கர வாகனங்களில் வருகின்றனா். அவா்கள் வாகனங்களை கடைகளின் முன்பு சாலையின் ஓரங்களில் நிறுத்துகின்றனா்.

ஏரியூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதால், அப்பகுதிகளில் உள்ள காய்கறிக் கடைகளை சாலையோரங்களில் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா். இதனால் அப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஏரியூா் பேருந்து நிலையப் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், ஆக்கிரமிப்பு சாலையோரக் கடைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறையினருக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com