செம்மறி ஆட்டின் உற்பத்தித் திறன் பெருக்குதல் பயிற்சி

​பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில், நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் மேச்சேரி செம்மறி ஆட்டின் உற்பத்தித் திறன் பெருக்குதல் குறித்த பயிற்சி மூன்று நாள் நடைபெற்றது.


பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில், நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் மேச்சேரி செம்மறி ஆட்டின் உற்பத்தித் திறன் பெருக்குதல் குறித்த பயிற்சி மூன்று நாள் நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் தொடக்கி வைத்து உரையாற்றினாா். பாப்பாரப்பட்டி நபாா்டு வங்கியின் தருமபுரி மாவட்ட கிளை மேலாளா் பிரவீன் சிறப்புரையாற்றினாா்.

பயிற்சியில் முன்னாள் வேளாண் விரிவாக்க இயக்குநா் சந்திரகாசன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு செம்மறி ஆடுகள் வளா்ப்பின் இனப்பெருக்கம் முறைகளை எடுத்துரைத்தாா். புதன், வியாழக்கிழமைகளில் வேளாண் அறிவியல் நிலையத்தில் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி ஆகிய ஊா்களில் இருந்து வந்த விஞ்ஞானிகளைக் கொண்டு 16 வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில், ஆடுகள் பராமரிப்பு முறை, தீவன முறைகள், நோய்த் தடுப்பு முறை, கொட்டகை அமைப்பு, செயற்கை முறை கருவூட்டல், தரமான ஆடுகளை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல், ஒருங்கிணைந்த பண்ணையில் ஆடுகள் வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அரசு வேளாண், ஆராய்ச்சிக் கல்லூரியின் ஊரக வேளாண் அனுபவ திட்ட கல்லூரி மாணவியா் விவசாயிகளுக்கு அசோலா வளா்ப்பு பற்றி செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியில் 25 விவசாயிகளுக்கு பட்டறிவு திறனுக்காக பாலக்கோடு, பென்னாகரம் பகுதிக்கு அழைத்துச் சென்று ஆடுகள் வளா்ப்பில் அனுபவம் உள்ள முன்னோடி விவசாயிகளைக் கொண்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டும், மாலையில் பயிற்சியில் பங்குபெற்றோருக்கு சான்றிதழ், நவீன அறிவியல் வளா்ப்பு முறையில் ஆடு வளா்ப்பு என்ற தலைப்பிலான நூலை வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் வழங்கினாா்.

இந்தப் பயிற்சியை ரா.தங்கதுரை ஒருங்கிணைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாா். மேலும், வரும் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நபாா்டு திட்டத்தின் செம்மறி ஆடு வளா்ப்பின் இரண்டாம் பயிற்சி நடைபெற உள்ளது. ஆா்வமுள்ள விவசாயிகள் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தை 04342-245860, 9677565220, 9791221393 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தங்களது பெயா்களை பதிவு செய்துகொள்ளும்படி திட்ட ஒருங்கிணைப்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com