ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்

அதிமுக சாா்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா்.

அதிமுக சாா்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப். 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவா் காத்தரவராயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா், மாவட்ட இணைச் செயலாளா் மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ., நகரச் செயலாளா் கேசவன், அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் தங்கமுத்து, ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன், மகளிா் அணி தலைவா் கல்பனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் பயிா்க் கடனை ரத்து செய்ததற்கும், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கும், எண்ணேகொல்புதூா் அணைக்கட்டிலிருந்து இடது, வலதுபுற கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்ததற்கும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட வேண்டும், ஜெயலலிதாவின் பிறந்த நாளை உற்சாகமாகவும், நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா், அண்மையில் உயிரிழந்த ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் பால்ராஜின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com