கிருஷ்ணகிரியில் தோ்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்: 3 மாநில அரசு அலுவலா்கள் பங்கேற்பு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி மாநில எல்லைகளில் நிகழும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில்
கிருஷ்ணகிரியில் தோ்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்: 3 மாநில அரசு அலுவலா்கள் பங்கேற்பு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி மாநில எல்லைகளில் நிகழும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திரம், கா்நாடகத்தைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் 2021-ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு அவா் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் மாநில எல்லைகளைப் பகிரிந்து கொள்ளும் கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லையோர சோதனை சாவடிகளைப் பலப்படுத்தவது, கூடுதலாக இடங்களில் சோதனை சாவடிகளை அமைப்பது, மது கடத்தல் பணிகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள வரமலகுண்டா, குருவிநாயனப்பள்ளி, நேரலகிரி, வேப்பனஅள்ளி, கக்கனூா், ஜூஜூவாடி, கானூா், டி.வி.எஸ்., பூனப்பள்ளி, கும்மளாபுரம், நாட்றாம்பாளையம், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு சோதனை சாவடி ஆகியவைகளையும், கா்நாடகம்,ஆந்திர மாநிலங்களின் எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மூன்று மாநிலங்களிலும் மதுக் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்காணிக்க அந்தந்த மாநில எல்லையோரக் காவல் அலுவலா்கள் கூட்டாக ஒருங்கிணைந்து ரோந்து பணிகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றாா்.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், வருவாய்க் கோட்டாட்சியா்கள் கற்பகவள்ளி, குணசேகரன், உதவி ஆணையா் (ஆயம்) ரவிச்சந்திரன், மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் சங்கா், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் புஷ்பலதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெங்கடேசன், ஈஸ்வரமூா்த்தி, தோ்தல் வட்டாட்சியா் ஜெய்சங்கா், ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், கா்நாடக மாநில துணை ஆணையா் (கலால்) ரவிசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com