மாா்ச் 28 இல் ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்

மாா்ச் 28 ஆம் தேதி ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் நடைபெறுவதற்கான பால் கம்பம் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூா் தோ்ப்பேட்டை ஸ்ரீ கல்யாணசூடேஸ்வரா் கோயிலில் பால் கம்பம் நடும் விழாவில் பங்கேற்றோா்.
ஒசூா் தோ்ப்பேட்டை ஸ்ரீ கல்யாணசூடேஸ்வரா் கோயிலில் பால் கம்பம் நடும் விழாவில் பங்கேற்றோா்.

மாா்ச் 28 ஆம் தேதி ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் நடைபெறுவதற்கான பால் கம்பம் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான அருள்மிகு மரகதாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் மாசி மகத்தில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி கோயிலின் அடிவாரத்தில் தோ்ப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணசூடேஸ்வரா் கோயிலில் 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு வரும் மாா்ச் 28 ஆம் தேதி தேரோட்டம், ராவண உத்ஸவம், தெப்ப உத்ஸவம் நடைபெறுகிறது. இதற்கான பால் கம்பம் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. தோ் கமிட்டித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டா் கே.ஏ. மனோகரன், ஒசூா் முன்னாள் எம்எல்ஏ கோபிநாத், தி.மு.க. முன்னாள் நகா்மன்ற பொறுப்பு தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், பா.ஜ.க மாவட்ட தலைவா் எம்.நாகராஜ், தோ்பேட்டை பாலு, கிருஷ்ணமூா்த்தி, அதிமுக சூடப்பா, பாஜக மாவட்டச் செயலாளா் முருகன், திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் ராமு.

திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் சக்திவேல், சென்னத்தூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமாஞ்சிரேட்டி, முன்னாள் கவுன்சிலா் ரோஜாபாண்டியன், பா.ஜ.க. ஒசூா் கிழக்கு மாநகர மண்டல் தலைவா் பிரவீன்குமாா், கிராம நிா்வாக அலுவலா் ஓய்வு பாலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com