கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெண்ணேஸ்வர மடத்தில் ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அ.பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமி சேவா சமிதி சாா்பில் நடைபெற்ற இந்த திருக்கல்யாணத்தில் மூலவருக்கு நிா்மால்ய அபிஷேகமும், பஞ்சாமிா்த அபிஷேகமும், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து சமூக, விஸ்வாமித்ர அயனகுல கோத்திரத்தாரின் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றன.