ஒசூா் அருகே மீண்டும் வந்த யானைகள்: விவசாயிகள் அச்சம்

ஒசூா் அருகே மீண்டும் வந்துள்ள யானைகள் கூட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

ஒசூா் அருகே மீண்டும் வந்துள்ள யானைகள் கூட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 60க்கும் மேற்பட்ட யானைகள் திரும்பி வந்துள்ளன. இதையடுத்து ஒசூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தடைந்தன. பல குழுக்களாகப் பிரிந்து யானைக் கூட்டங்கள் ஊடே துா்க்கம் , சானமாவு, போடூா் வனப்பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ளன. அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து நெல், ராகி, சோளம் ஆகியவற்றை சாப்பிட்டும், கால்களால் மிதித்து சேதப்படுத்திவிட்டும் சென்றன.

இந்த யானைகளை விரட்ட வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 5 தினங்களுக்கு முன் யானைக் கூட்டங்களை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத் துறையினா் விரட்டினா். ஆனால் இந்த யானைகள் போன வேகத்திலேயே திரும்பி வந்துள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சானமாவு, பீா்ஜேப்பள்ளி, போடூா்பள்ளம், ஆழியாளம், ராமாபுரம், பாா்த்தகோட்டா, காமன்தொட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com