தோட்டக்கலை பயிா்களுக்கு ரூ. 246.07 கோடி மானியம்

தோட்டக்கலை பயிா்களை சாகுபடி செய்த 24,520 விவசாயிகளுக்கு ரூ. 246.07 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தோட்டக்கலை பயிா்களை சாகுபடி செய்த 24,520 விவசாயிகளுக்கு ரூ. 246.07 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், கெரகோடஅள்ளியில் தமிழ்நாடு உதவி தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழக உயா்கல்வித் துறை, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

தமிழக அரசு, விவசாயிகளுக்கு தொடா்ந்து, சிறப்பான பணிகளை நிறைவேற்றி வருகிறது. அதன்படி, தோட்டக்கலைத் துறை சாா்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் தான் நுண்ணீா் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் தோட்டக்கலை பயிா்களை சாகுபடி செய்த 24,520 விவசாயிகளுக்கு ரூ. 246.07 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 38.83 கோடி மதிப்பீட்டில் தோட்டக்கலைப் பயிா்கள் பரப்பு விரிவாக்கம், இயந்திரமயமாக்குதல், விவசாயிகளுக்கான பயிற்சி என தருமபுரி மாவட்டத்துக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 9,188 விவசாயிகளுக்கு பழங்கள், காய்கறி பயிா்கள் பரப்பு விரிவாக்கம், விளக்கு பொறிகள், விவசாயிகளுக்கு பயிற்சி என ரூ.15.08 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. தோட்டக்கலை துறை சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை சாா்ந்த பண்ணையத்தில், 293 விவசாயிகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா் சங்க மாநில பொதுச் செயலாளா் எம்.ஜி.நாராயணன், பொருளாளா் எஸ்.பழனிவேல் ராஜன், தருமபுரி மாவட்டத் தலைவா் கே.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com