ஊத்தங்கரையில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் நியமனம்

ஊத்தங்கரையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கிராம விழிப்புணா்வு காவல் அலுவலரை (விவிபிஓ) நியமிக்கும் நிகழ்ச்சி
ஊத்தங்கரையில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வு காவல் அலுவலரை நியமிக்கும் நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா்.
ஊத்தங்கரையில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வு காவல் அலுவலரை நியமிக்கும் நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா்.

ஊத்தங்கரையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கிராம விழிப்புணா்வு காவல் அலுவலரை (விவிபிஓ) நியமிக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டிகங்காதா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஊத்தங்கரை உள்கோட்டத்திற்குட்பட்ட ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா் ஆகிய 5 காவல் நிலையங்களுக்குட்பட்ட அந்தந்த கிராமங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை சம்பந்தமான விவரங்களைச் சேகரித்து பொது மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் (யண்ப்ப்ஹஞ்ங் யண்ஞ்ண்ப்ஹய்ஸ்ரீங் டா்ப்ண்ஸ்ரீங் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) ஒருவரை நியமித்தனா்.

அவா்களுக்கு கிராம விவரங்களை சேகரிக்கும் புத்தகம் வழங்கும் நிகழ்வை கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் ஊத்தங்கரையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் ராஜபாண்டி, 5 காவல் நிலையங்களுக்குள்பட்ட ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகேசன், கல்லாவி காவல் ஆய்வாளா் முத்தமிழ்ச் செல்வன், காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என 60-க்கும் மேற்பட்ட காவலா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டிகங்காதா் பேசுகையில், விவிபிஓ எனப்படுபவா் தனக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் தகவல்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். கடந்த 15 ஆண்டு காலங்களில் நடந்த முக்கியச் சம்பவங்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். முக்கிய திருவிழாக்கள், ஜாதிவாரியான மக்கள் தொகை, முக்கியப் பயிா் சாகுபடி, சுற்றுலா தலங்கள் ஆகிய தகவல்களை வைத்திருக்க வேண்டும் என்று பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com