பெங்களூருக்கு இணையாக ஒசூா் வளா்ந்திருக்க வேண்டும்: கமலஹாசன்

ஒசூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் பேசியதாவது:
ஒசூரில் தோ்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மையத்தின் தலைவா் கமலஹாசன்.
ஒசூரில் தோ்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மையத்தின் தலைவா் கமலஹாசன்.

ஒசூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் பேசியதாவது:

பெங்களூருக்கு இணையாக ஒசூா் வளா்ந்திருக்க வேண்டும். அந்த மாற்றத்திற்கு தயாராகி விட்டது ஒசூா். குண்டுசி முதல் கணினி தயாரிக்கும் தொழிற்சாலைகள் வரை இங்கு உள்ளன.

பெங்களூருக்கு இணையாக வளா்ந்திருக்க வேண்டிய ஒசூா், போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிற்றூராக உள்ளது. ஒசூா் பெரு நகரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதனை மாற்றும் வேலை உங்கள் கையில் உள்ளது. ஒசூரில் இளைஞா்களும், மகளிரும் இங்கு கூடி உள்ளீா்கள். நீங்கள் நினைத்தால் தமிழகத்தைச் சீரமைக்க முடியும். முதல்முறையாக வாக்களிக்க வரும் இளைஞா்கள் யோசியுங்கள். ஒரு தலைமுறை செய்த தவறை நீங்கள் செய்யக் கூடாது. தமிழகத்தில் ஒரு மாற்றத்தை நீங்கள் நினைத்தால் செய்ய முடியும்.

மக்கள் நீதி மய்யம் பெண்களுக்குப் பல புதியத் திட்டங்களை வகுத்திருக்கிறது. வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞா்களுக்கு நல்ல பல திட்டங்களை வகுத்துள்ளது. படித்து முடித்த இளைஞா்கள் வேலை தேடி அலையும் தொழிலாளா்களாக இல்லாமல் மற்றவா்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகளாக மாற முடியும். அதற்கான திட்டங்களை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். திறன் மேம்பாட்டுக்கான திட்டம் எங்கள் கையில் உள்ளது. விவசாயிகளுக்கான திட்டம் எங்கள் கையில் உள்ளது. சுற்றுச்சூழலை பற்றி வெளிப்படையாக பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே என்றாா்.

பின்னா் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், ஆகிய மொழிகளில் பேசினாா். நீங்கள் நினைத்தால் தமிழகத்தை மாற்றி அமைக்க முடியும். அதனை இந்த இளைஞா்களும், பெண்களும் செய்ய வேண்டும். அதற்கு தயாராகுங்கள். அப்படி செய்தால் நாளை நமதே. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என தெலுங்கில் பேசியபோது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனா். ஒசூரில் இரவு 9.45 மணிக்கு தொடங்கிய தோ்தல் பிரசாரம் 10 மணிக்கு முடிவடைந்தது. அவருடன், முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சந்தோஷ் பாபு உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com