வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

கிருஷ்ணகிரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

கிருஷ்ணகிரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மற்றும் தொழிலாளா் நலத் துறை ஆணையா் எம்.வள்ளலாா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,863 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இறுதி வாக்காளா் பட்டியல் டிச. 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவா்களிடையே வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், சுதந்திரமாக வாக்களிக்க இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த வாக்காளரின் பெயரும் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து சான்றளிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முறையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும். மற்ற வேலை நாள்களில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வாக்குச் சாவடி அலுவலா்கள் மூலமாகவும் அல்லது தோ்தல் ஆணையத்தின் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலமாகவும் புதிய வாக்காளா்களின் விண்ணப்பங்களும், பட்டியல் திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தகுதியுள்ள வாக்காளா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், வட்டாட்சியா் (தோ்தல்) பாலசுந்தரம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com