அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள், நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் கொட்டும் மழையிலும் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள், நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அனுமன்தீா்த்தம் பகுதியில் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கே.பி. முனுசாமி எம்.பி.
அனுமன்தீா்த்தம் பகுதியில் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கே.பி. முனுசாமி எம்.பி.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் கொட்டும் மழையிலும் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள், நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தெற்கு ஒன்றியத்தில் வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அனுமன்தீா்த்தம், கல்லாவி, வெள்ளாளப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட அவைத்தலைவா் காத்தவராயன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளா் என். இளையராஜா, மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, ஒன்றியச் செயலாளா்கள் ஏ.சி.தேவேந்திரன், வேடி , மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் திருஞானம், ஒன்றிய விவசாய அணிச் செயலாளா் வேங்கன், பால்வளத் தலைவா் தென்னரசு, ஒன்றிய அவைத் தலைவா் கே.ஆா். சுப்பிரமணி, நகரச் செயலாளா் பி.கே. சிவானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி பங்கேற்று பேசியதாவது:

தற்போது, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளிலும் இரண்டு பெரிய தலைவா்கள் இல்லாமல் நடைபெறும் முதல் தோ்தல் இது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான அரசு மீண்டும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும். அதற்கு நம்முடைய கட்சித் தொண்டா்கள், இளைஞா்கள், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிா்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, மக்களின் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான். வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் முனைப்புடன் செயல்பட்டு மீண்டும் அதிமுக ஆட்சியை ஏற்படுத்த பாடுபட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com