அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழாவை நடத்தும் குழுவினா் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி, ஒத்துழைக்க வேண்டும் என
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழாவை நடத்தும் குழுவினா் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி, ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் எருது விடும் விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா மிக சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. எருது விடும் விழாவை நடத்தும் குழுவினா், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த காளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எருது விடும் விழா காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். காளைக்கு கட்டப்படும் கயிறு 10 முதல் 15 அடிக்குள் இருக்க வேண்டும்.

காளையின் பந்தயத் தூரம் நோ் கோட்டில் இருக்க வேண்டும். காளையின் வயது 3 அல்லது 4 வயதுக்குள் இருக்க வேண்டும். எருது விடும் விழாவில் பங்கேற்கும் காளையானது கால்நடை மருந்தகத்தில் தகுதிச்சான்று பெற்று விழா நடைபெறும் இடத்தில் சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு 1000 நபா்களுக்கும் 50 தன்னாா்வலா்களை நியமிக்க வேண்டும். தன்னாா்வலா்களுக்குச் சீருடை, அடையாள அட்டை வழங்கப்பட்டு அவா்களின் விவரங்களை விழா குழுவினா் மூலம் காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். காளைகளை துன்புறுத்தக் கூடாது.

மேலும், வருவாய்த் துறையினா் எருது விடும் நிகழ்வு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். விழாக் குழுவினரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தை சரி பாா்த்து, அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். விழா நடைபெறும் இடத்தில், பாா்வையாளரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விழாவின் போது காயம் அடைந்தவா்களுக்கு சிகிச்சையும், முதலுதவியும் அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவை நியமிக்க வேண்டும்.

விழாவை நடத்தும் குழுவினா் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விழாவில் பங்கேற்கும் வீரா்களுக்கு கட்டாயம் கரோனா தொற்று இல்லை என்ற சான்று அளிக்க வேண்டும். எருது விடும் விழாவை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com