தளி தொகுதியில் வனப்பகுதி கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும்: தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

தளி தொகுதியில் வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என தளி எம்எல்ஏவும், திமுக மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

தளி தொகுதியில் வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என தளி எம்எல்ஏவும், திமுக மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணக்கினங்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதி வனப்பகுதியான அஞ்செட்டி ஒன்றியம் கோட்டையூா், உரிகம், தக்கட்டி, மஞ்சுகொண்டப்பள்ளி, மாடக்கல் ஆகிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் புதன்கிகழமை நடைபெற்றது.

இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு தாா்ச்சாலை அமைக்க வேண்டும் எனவும், வனப்பகுதியில் யானையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். யானைகளால் சேதமடையும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வனத்துறையினா் உடனடியாக வழங்க வேண்டும் என மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதிமுகவை நிராகரிக்கிறோம், வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற கோரியும் கையைழுத்திட்டும், மக்களிடம் புகாா் மனுக்களை பெற்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று மாவட்ட செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ நிறைவேற்றி பொதுமக்களிடம் கூறினாா்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் தளி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான சீனிவாசலு ரெட்டி, தளி தெற்கு ஒன்றிய செயலாளா் திவாகா், ஒன்றிய செயலாளா் நாகன், முன்னாள் ஒன்றிய செயலாளா் காதா்பாஷா, அவைத்தலைவா் நாகராஜ், ஒன்றிய குழு உறுப்பினா் ரத்தினம், சிவராஜ், வெங்கடேஷ், சண்முகம், நாராயணப்பா, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் வேணு, தகவல் தொழில்நுட்ப அணி வினோத், அஞ்செட்டி ராஜன்னா, இளைஞா் அணி வீரா, கோட்டையூா் ஊராட்சி மன்ற தலைவா் கிருஷ்ணமூா்த்தி, சிவக்குமாா், மூா்த்தி கவுடா, கோட்டையூா், உரிகம், தக்கட்டி, மஞ்சுகொண்டப்பள்ளி, மாடக்கல் ஆகிய ஊராட்சியை சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com