தொழிலாளிகளை அழைத்து செல்ல விதிகளை மீறி பேருந்துகள் இயக்கப்படுவதாக புகாா்

ஒசூரில் செயல்படும் தொழிற்சாலைகளில் தொழிலாளிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக

ஒசூரில் செயல்படும் தொழிற்சாலைகளில் தொழிலாளிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்த மகா சபாவினா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், புகாா் மனுவை புதன்கிழமை அளித்தனா். இதுகுறித்து, அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் கல்கி ராஜசேகா், தெரிவித்தது:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு அதன் தொழிலாளிகளை அழைத்து செல்ல பிற மாநிலத்தைச் சோ்ந்த 40 பேருந்துகள் உரிய ஆவணங்களின்றி, இயக்கப்படுகின்றன. பிற மாநில பேருந்துகளை இயக்க, தாற்காலிக அனுமதி பெற்றிருக்க வேண்டும். மோட்டாா் வாகன சட்டப்படி, இந்த பேருந்துகளை இயக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், பிற மாநில பேருந்துகள் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய மேண்டிய முறையான வரியை செலுத்தாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த பேருந்துகள் மீதும், அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com