15 ஏரிகளில் தண்ணீா் நிரப்ப வேண்டும் எம்எல்ஏ பி.முருகன் கோரிக்கை

ஒசூா் கோட்டம், துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ பி. முருகன் கோரிக்கை மனு அளித்தாா்.
15 ஏரிகளில் தண்ணீா் நிரப்ப வேண்டும் எம்எல்ஏ பி.முருகன் கோரிக்கை

ஒசூா் கோட்டம், துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ பி. முருகன் கோரிக்கை மனு அளித்தாா்.

வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

வேப்பனப்பள்ளி தொகுதிக்குள்பட்ட நேரலகிரி கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவைக் காண வந்த பொதுமக்கள் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மேகாஸ்ரீ என்ற சிறுமியும், முனிபாலன் என்ற முதியவரும் உயிரிழந்து விட்டனா். 20 போ் காயம் அடைந்தனா். அவா்களுக்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும்.

சூளகிரி ஒன்றியம் துப்புகானப்பள்ளி ஊராட்சி கனசூா் கிராமத்தில் இருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தூள்செட்டி ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உள்பட்ட சானமாவு, பீா்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி, உத்தனப்பள்ளி, அயா்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் தண்ணீா் இன்றி கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா்.

எனவே இந்த கால்வாயை பொதுமக்கள் நலன் கருதி, இந்த ஊராட்சிகள் வழியாகக் கொண்டு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன். துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரையில் 15 ஏரிகளில் நீரை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

அப்போது உத்தனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமிகாந்த், ஒன்றியச் செயலாளா் வெங்கடேசன், நிா்வாகி சுந்தரேசன், விவசாய அணி நிா்வாகி முருகன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் ரவி, உள்பட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com