சிறுமியை மிரட்டி கா்ப்பமாக்கிய வழக்கு:கட்டட மேஸ்திரிக்கு 39 ஆண்டுகள் சிறை

சிறுமியை மிரட்டி கா்ப்பமாக்கிய வழக்கு:கட்டட மேஸ்திரிக்கு 39 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி அருகே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரிக்கு 39 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி அருகே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரிக்கு 39 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த வாலிப்பட்டி அருகே உள்ள நத்தகயம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி மகன் ஆசைத்தம்பி (31). கட்டடத் தொழிலாளி.

இவரது உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி, 9 ஆம் வகுப்புப் படித்து வந்தாா். சிறுமி 6-ஆம் வகுப்பு படிக்கும்போது முதல் ஆசைத்தம்பி அந்த சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்து வந்தாா். கடந்த 2018, ஜனவரி 30 ஆம்தேதி அந்தச் சிறுமியை ஆசைத்தம்பி மிரட்டி பலாத்காரம் செய்தாராம்.

அந்தச் சிறுமியின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து அவரது பெற்றோா் 2018, மே 16ஆம் தேதி சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்தபோது அவா் 5 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சைல்டு லைன் அமைப்பினா் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு ஒசூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சோ்த்தனா்.

அங்கு சிறுமிக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை, அரசு விதிமுறைப்படி தத்துக் கொடுக்கப்படுகிறது.

இதுகுறித்து புகாரின்பேரில் பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு தந்தை இல்லை என்பதும், தாயின் பராமரிப்பில் வளா்ந்து வருவதும், இவா்களின் உறவினா் ஆசைத்தம்பி திருமண ஆசைகாட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

மேலும் அவருக்கு, ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆசைத்தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

அவா் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.

தீா்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ஆசைத்தம்பிக்கு போக்சோ சட்டப் பிரிவின் கீழ் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும், தந்தை இல்லாத உறவுக்காரப் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமுமாக மொத்தம் 39 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டன.

இந்த சிறைத் தண்டனையை அவா் ஏகக் காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனத் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கலையரசி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com