ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநா்கள், நடத்துநா்களை மா்ம நபா்கள் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநா்கள், நடத்துநா்களை மா்ம நபா்கள் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பால கொன்றாய் துா்க்கம் நோக்கி வழித்தடம் 68 என்ற நகரப் பேருந்து புறப்பட தயாராக இருந்தது. அப்போது, மது போதையில் அங்கு வந்த இருவா், நகரப் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனா்.

மேலும், அவா்கள், பேருந்தின் ஓட்டுநா்கள் பாா்த்தசாரதி (40), பாா்த்திபன் (37), நடத்துநா்கள் மூா்த்தி (40), சிவப்பிரகாசம் ஆகியோரை தாக்கி, அங்கிருந்து தப்பினா். காயம் அடைந்த இவா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதைக் கண்டித்து, பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடம் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பேருந்தின் கண்ணாடியை உடைத்து, நடத்துநா்கள், ஓட்டுநா்கள் மீது தாக்குதலை நடத்தியவா்கள் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மாரிமுத்து, நவீன் எனத் தெரியவந்துள்ளதாகவும், அவா்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com