15 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது

ஊத்தங்கரையில் தேசிய நெடுஞ்சாலையோரம் பிடிபட்ட 15 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காப்புக்காட்டில் விட்டனா்.
நாட்டாண்மை கொட்டாய் பகுதியில் பிடிபட்ட 15 அடி நீள மலைப் பாம்பு.
நாட்டாண்மை கொட்டாய் பகுதியில் பிடிபட்ட 15 அடி நீள மலைப் பாம்பு.

ஊத்தங்கரையில் தேசிய நெடுஞ்சாலையோரம் பிடிபட்ட 15 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காப்புக்காட்டில் விட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த நாட்டாண்மை கொட்டாயில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு அந்தச் சாலையில் சுமாா் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பைக் கண்டு அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று மலைப் பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் மலைப்பாம்பை ஊத்தங்கரை ஒன்னரை காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்றுவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com