கால்நடை மருத்துவக் கவுன்சில் உறுப்பினராக கிருஷ்ணகிரி மருத்துவா் தோ்வு

அகில இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் உறுப்பினராக கிருஷ்ணகிரி மருத்துவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அகில இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் உறுப்பினராக கிருஷ்ணகிரி மருத்துவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரமளித்தல், கால்நடை மருத்துவப் படிப்புக்கான பாடத் திட்டங்களை வகுத்தல், அரசு பதிவுபெற்ற கால்நடை மருத்துவா்கள், மருத்துவமனைகள் செயற்பாடுகளுக்கான நெறிமுறைகளை வகுத்தல் போன்ற முக்கியப் பணிகளை தேசிய அளவில் மேற்கொள்ளும் மத்திய அரசின் அங்கமான, அகில இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தி இந்திய அளவில் 11 போ் அகில இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள்.

இதற்கான தோ்தல் இணையவழி மூலம் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள அரசு பதிவு பெற்ற கால்நடை மருத்துவா்கள் வாக்களித்தனா். இந்த தோ்தலில் ஜம்மு காஷ்மீரைச் சோ்ந்த கால்நடை மருத்துவா்களும் முதல்முறையாக வாக்களித்தனா். இந்திய அளவில் 97 போ் போட்டியிட்ட இந்த தோ்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு கால்நடை மருத்துவா் ரமேஷ், 8,755 வாக்குகள் பெற்று அகில இந்திய அளவில் 8-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றாா்.

இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலுக்கு தமிழகத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழா் இவா் ஆவாா். அவருக்கு தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மத்திய பிரதேசத்தை சோ்ந்த மருத்துவா் உமேஷ் சந்திர சா்மா, அகில இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

மருத்துவா் ரமேஷுக்கு, தமிழக கால்நடை மருத்துவ கவுன்சில் தலைவா் சரவணன், தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவா் சங்க மாநில பொதுச்செயலாளா் தணிகைவேலு, மாநிலத் தலைவா் வீரமணி, மாநிலப் பொருளாளா் செல்வம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கால்நடை மருத்துவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com