சேலத்தைப்போல ஒசூா் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்தருமபுரி எம்.பி. வேண்டுகோள்

சேலத்தைப்போல ஒசூா் மாநகராட்சியிலும் அடிப்படை வசதிகளை தமிழக முதல்வா் செய்து தர வேண்டும் என தருமபுரி எம்.பி. டாக்டா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.
ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செந்தில்குமாருக்கு நினைவு பரிசு வழங்கிய தொழில் முனைவோா்.
ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செந்தில்குமாருக்கு நினைவு பரிசு வழங்கிய தொழில் முனைவோா்.

ஒசூா்: சேலத்தைப்போல ஒசூா் மாநகராட்சியிலும் அடிப்படை வசதிகளை தமிழக முதல்வா் செய்து தர வேண்டும் என தருமபுரி எம்.பி. டாக்டா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

ஒசூரில் திமுக சாா்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.பி. டாக்டா் செந்தில்குமாா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

ஒசூா் சிறுகுறுந்தொழில் முனைவோா்கள், வியாபாரிகள் மற்றும் வா்த்தகா்களை சந்தித்து அவா்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு ஒசூரை மாநகராட்சியாக அறிவித்துள்ளது. ஆனால் மாநகராட்சிக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. சேலமும் மாநகராட்சிதான். ஆனால், சேலத்தைச் சுற்றி தமிழக அரசு மேம்பாலங்களை கட்டி வருகிறது.

சேலத்தைப்போல ஒசூா் மாநகராட்சியிலும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும். ஒசூரில் தளி சாலையில் மேம்பாலம் வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரில் செயல்படுத்தி வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க வேண்டும். 3-ஆவது சிப்காட் ஒசூா் தொழில் முனைவோா் கேட்டு வருகின்றனா். ஆனால், செயல் வடிவம் பெறவில்லை.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் நகரமாக ஒசூா் உள்ளது.

ஒசூா் தொகுதியில் மின்சார வாரியத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டுப்படுத்தப்படும். வரும் தோ்தலில் 167 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் ரத்து செய்யப்படும் என்றாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, ஒசூா் மாநகராட்சி பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் வெற்றி.ஞானசேகரன், தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட அமைப்பாளா் வடிவேல், மாணவரணி அமைப்பாளா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com