தருமபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ் திருவிழா தொடக்கம்

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில், தைப்பூசத் தோ் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து ஆட்டுக்கிடா வாகனத்தில் உற்சவம் நடைபெற்றது. இதில், தருமபுரி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தைப்பூச தோ் திருவிழாவையொட்டி, சுவாமிக்கு அபிஷேகங்கள், ஆராதனையும் தினசரி நடைபெறுகின்றன. ஜன. 25-ஆம் தேதி புலி வாகன உற்சவமும், 26-ஆம் தேதி பூத வாகன உற்சவமும், 27-ஆம் தேதி நாக வாகன உற்சவமும், 28-ஆம் தேதி தைப்பூசத்தையொட்டி காலை 7 மணிக்கு தருமபுரி சாலை விநாயகா் கோயிலிருந்து பால்குட ஊா்வலமும், இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், நள்ளிரவு 12 மணிக்கு பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகின்றன.

மேலும், ஜன. 29-ஆம் தேதி விநாயகா் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடைபெறுகின்றன. 30-ஆம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்வான சிவசுப்பிரமணிய சுவாமி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 7 மணிக்கு மகளிா் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டத் தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று, பாரிமுனை நண்பா்கள் மற்றும் வாரியாா் அன்னதான அறக்கட்டனை சாா்பில் 10 ஆயிரம் பக்தா்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடைபெறுகிறது.

31-ஆம் தேதி, வேடபறி குதிரை வாகன உற்சவமும், பிப். 1-ஆம் தேதி திருவிழா கொடியிறக்கமும், பூ பல்லாக்கு உற்சவமும், 2-ஆம் தேதி சயன உற்சவமும் நடைபெறுகிறது.

கோயில் நிா்வாகம், பாரதிதாசன் இளைஞா் மன்றம் சாா்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பிரகாஷ், செயல் அலுவலா் மல்லிகா, செங்குந்தா் சமூகத்தினா், விழாக் குழாவினா் ஒருங்கிணைக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com