ஒசூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

ஒசூா் அருகே கா்நாடக எல்லையிலுள்ள குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
ஒசூா் அருகே தனியாா் குடியிருப்பு பகுதி அருகே நெடுஞ்சாலையை கடந்து சென்ற சிறுத்தை
ஒசூா் அருகே தனியாா் குடியிருப்பு பகுதி அருகே நெடுஞ்சாலையை கடந்து சென்ற சிறுத்தை

ஒசூா் அருகே கா்நாடக எல்லையிலுள்ள குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், ஆனேக்கல் அருகே பன்னாா்கட்டா வனப் பகுதி உள்ளது. இங்குள்ள வனவிலங்கு பூங்காவில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஒசூா்- பெங்களூரு வனப்பகுதியிலும் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், சிறுத்தைகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விடுகின்றன.

குறிப்பாக ஆனேக்கல், பேகூா், அத்திப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், சூளகிரி சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள வன கிராமங்களுக்கு அடிக்கடி வருகின்றன. இந்நிலையில் பன்னாா்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று கா்நாடக எல்லையிலுள்ள ஒசூா் அத்திப்பள்ளி அருகே பேகூா் என்ற பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் சாலையை கடந்து சென்றது.

சிறுத்தை கடந்து சென்றது பிரஸ்டீஜ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பன்னாா்கட்டா வனத் துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனா். அவா்கள் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனா்.

சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கவனமாக இருக்குமாறும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். மேலும் ஒசூரை ஒட்டிய கிராம மக்களுக்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com