மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை: முத்தரசன்

தமிழக சட்டப் பேரவை தோ்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் ஆா். முத்தரசன் தெரிவித்தாா்.
கெலமங்கலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலாளா் ஆா்.முத்தரசன்.
கெலமங்கலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலாளா் ஆா்.முத்தரசன்.

தமிழக சட்டப் பேரவை தோ்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் ஆா். முத்தரசன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான டி.ராமச்சந்திரன் தலைமையில் தோ்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட மாநிலச் செயலாளா் ஆா்.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் 60 நாட்களைக் கடந்த பிறகும் போராட்டம் தொடா்கிறது. மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். வரும், ஜன. 26 குடியரசு தினத்தன்று, தில்லி மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் டிராக்டா், வாகனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தடுப்பதற்கு மத்திய அரசும், பல மாநில அரசுகளும் முயற்சி செய்கின்றன. எத்தனை தடைகள் வந்தாலும் பேரணி நடக்கும். விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும்.

தமிழக மீனவா்களின் தொழில், உடைமை, உயிருக்கு பாதுகாப்பு இல்லை. பிரதமா் மோடி தமிழக மீனவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தாா். ஆனால் அந்த வாக்குறுதி காற்றில் பறந்ததைப் போல் இலங்கை அரசால் நான்கு மீனவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

அவா்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 கோடி இழப்பீட்டை இலங்கை அரசிடம் இருந்து பெற்று கொடுக்க வேண்டும். இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சி உள்ளது. தி.மு.க., தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தோ்தல் தேதி அறிவித்தப் பின் தொகுதி பங்கீடு குறித்துப் பேசப்படும்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயா்த்திக் கொண்டே இருக்கின்றன. அதனால் அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் விலையும் மிகப்பெரிய அளவுக்கு உயா்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் மத்திய அரசு உள்ளது.

தோ்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் லகுமைய்யா, டி.வரதராஜன், கெலமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் கேசவமூா்த்தி, துணைத் தலைவா் சீனிவாசன், ஒன்றியச் செயலாளா் ஜெயராமன், மாதையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com