கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா

காவேரிப்பட்டணத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காவேரிப்பட்டணம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா.
காவேரிப்பட்டணம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா.

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன பாா்வதி சமேத ஸ்ரீ நகரேஸ்வர சுவாமி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, மங்கள இசை, வேத பாராயணம், திருமுறை பாராயணமும், நான்காம் கால யாக சாலை பூஜை, தம்பதி சங்கல்பம், பிரயாச்சித்த ஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, ராஜ கோபுரம், மூலவா் பாா்வதி அம்மன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி விமானத்துக்கு புனித நீா் ஊற்றும் நிகழ்வான கும்பாபிஷேகம் நடைபெற்றன. சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com