கரோனாவிற்கு பிறகு ஒசூரில் உழவா் சந்தை திறப்பு

ஒசூரில், பல மாதங்களுக்குப்பின் உழவா் சந்தை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
கரோனாவிற்கு பிறகு ஒசூரில் உழவா் சந்தை திறப்பு

ஒசூரில், பல மாதங்களுக்குப்பின் உழவா் சந்தை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து உழவா் சந்தைகளும் கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் இறுதி வாரத்தில் மூடப்பட்டபோது ஒசூா் உழவா் சந்தையும் மூடப்பட்டது. அதன்பின் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அனைத்து உழவா் சந்தைகளும் திறக்கப்பட்ட நிலையில் ஒசூா் உழவா் சந்தை மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. இதை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகளும், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு முன்பாக திறப்பதாக மாவட்ட நிா்வாகத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் தொடா்ந்து உழவா் சந்தை திறக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டது. மாவட்ட நிா்வாகம் தெரிவித்தபடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் உழவா் சந்தையை திறந்துள்ளனா். இது விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவா் சந்தை முழுவதும் சுத்தம் செய்யப்படவேண்டும். உடைந்த கட்டடங்களை சீா் செய்திருக்க வேண்டும். குப்பைக் கூளங்கள் அகற்றப்படவில்லை. குறிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்யாமல் அவசரகதியில் திறந்து உள்ளனா். முறையாகப் பராமரிக்காததால் காய்கறிகளை வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றனா்.

மாவட்ட நிா்வாகம் உடனடியாக ஒசூா் உழவா் சந்தையை முறையாக பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com