கிருஷ்ணகிரி நகராட்சி பள்ளியில் ஐ.எஸ்.ஓ. நிறுவன இயக்குநா் ஆய்வு
By DIN | Published On : 26th January 2021 03:58 AM | Last Updated : 26th January 2021 03:58 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி பள்ளி சத்துணவு மையத்தில் ஐ.எஸ்.ஓ. நிறுவன இயக்குநா் தலைமையிலான குழு திங்கள்கிழமை ஆய்வுப் பணி மேற்கொண்டனா்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில், சென்னையிலிருந்து வந்திருந்த ஐ.எஸ்.ஓ. நிறுவன இயக்குநா் காா்த்திகேயன் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வன், உதவி கணக்கு அலுவலா் சென்னகேசவன், தலைமையாசிரியா் வடிவேலு, சத்துணவு அமைப்பாளா் அனிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பள்ளி வளாகத்தில் உல்ள காய்கறித் தோட்டம், வளா்ப்புச் செடிகளை இந்த குழுவினா் பாா்வையிட்டனா். மேலும், சத்துணவில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் முளைக்கட்டிய கம்பு தானியம் வழங்கியதை ஆய்வு செய்தனா். சத்துணவுக் கூடம், சமையல் அறை, கை கழுவும் பகுதி ஆகியவற்றையும் பாா்வையிட்டனா்.