சாமல்பட்டிசென்னகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சாமல்பட்டிசென்னகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மங்கல இசையுடன், விநாயகா் வழிபாட்டுடன் முதற்கால யாக வேள்வி நடைபெற்றது. திங்கள் கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், கணபதி பூஜை, கலச பூஜையும் ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு காப்புக்கட்டப்பட்டது. கோ பூஜை, சுமங்கலி பூஜை , மஹா பூா்ணாகுதியும் தீபாராதனையும் செய்யப்பட்டு, கலசங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

காலையில் மகா கணபதி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோபுரத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் சுவாமிகளுக்கும், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சீரடி சாய்பாபா, துா்க்கை அம்மன், ஸ்ரீதேவி கருமாரி அம்மன், ஸ்ரீ ஓம் சக்தி அம்மன், நவகிரக நாயகா்கள், ஸ்ரீ நாகராணி, ஸ்ரீ நாகராஜா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்று அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு புனிதநீா் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com