ரூ.12 கோடி நகை கொள்ளையா்கள்இன்று ஒசூரில் ஆஜா்

ஒசூா் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ. 12 கோடி நகை கொள்ளையில் கைதான கொள்ளையா்களை ஜன. 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒசூருக்கு போலீஸாா் அழைத்து வருகின்றனா்.

ஒசூா் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ. 12 கோடி நகை கொள்ளையில் கைதான கொள்ளையா்களை ஜன. 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒசூருக்கு போலீஸாா் அழைத்து வருகின்றனா்.

ஒசூா் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ. 12 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த பிற மாநிலக் கொள்ளையா்கள் 7 போ் தெலங்கானா மாநிலத்தில் வைத்து போலீஸாரால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து 25 கிலோ தங்க நகைகளை மீட்கப்பட்டதுடன், 7 துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள், ஒரு லாரி, டாடா சுமோ காா் போன்றவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸாா் அளித்த தகவலின்பேரில், கொள்ளையா்கள் தெலங்கானா மாநிலம், சைபராபாத் போலீஸாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனா். பிடிபட்ட கொள்ளையா்கள் தெலங்கானாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைக்காக திங்கள்கிழமை கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீஸாா்வசம் ஒப்படைக்கப்பட்டனா்.

திங்கள்கிழமை தெலங்கானாவில் இருந்து போலீஸ் வேனில் கிளம்பிய அந்த கொள்ளையா்கள் 7 பேரும் செவ்வாய்க்கிழமை ஒசூருக்கு அழைத்து வரப்படுகின்றனா்.

செவ்வாய்க்கிழமை காலையில் கொள்ளையா்கள் ஒசூருக்கு அழைத்து வரப்பட்டு ஒசூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா்கள்.

பின்னா், நீதிமன்ற அனுமதி பெற்று அவா்களைக் காவலில் எடுத்து விசாரணை நடத்திட ஒசூா் அட்கோ போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

பிடிபட்ட கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த சிலா் கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனா். அந்த வழக்கில் 3 கொள்ளையா்கள் பிடிபட்ட நிலையில், தப்பிய கொள்ளையா்கள் தான் தற்போது ஒசூா் கொள்ளையில் பிடிபட்டுள்ளனா். இதனால் இந்த கொள்ளையா்களை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரணை நடத்த, பஞ்சாப் மாநில போலீஸாரும் ஒசூா் வர உள்ளனா்.

இதே போல, நாடு முழுவதும் உள்ள நிதி நிறுவனங்கள், வங்கிகளில் நடந்த பெரிய கொள்ளைகளில் பதிவாகி உள்ள கொள்ளையா்களின் கைரேகைகள், தற்போது ஒசூா் கொள்ளையில் சிக்கி உள்ள கொள்ளையா்களின் கைரேகையுடன் ஒத்துப் போகிா என்பதை ஆராய பிற மாநிலங்களைச் சோ்ந்த போலீஸாரும் ஒசூா் வருகை தர உள்ளனா்.

இந்த கொள்ளைக் கும்பலை காவலில் எடுத்து விசாரணை நடத்தும் பட்சத்தில் பல்வேறு தகவல்கள் வெளி வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com