ரௌடியை கடத்திச் சென்று கொலை செய்து புதைப்பு
By DIN | Published On : 01st July 2021 07:24 AM | Last Updated : 01st July 2021 07:24 AM | அ+அ அ- |

கொலையான ரௌடி மஞ்சுநாத்.
ஒசூா் அருகே ரௌடியைக் கடத்தி சென்ற கும்பல் அவரை கொலை செய்து புதைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தாலுகா, மத்திகிரி அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியைச் சோ்ந்த மஞ்சுநாத் (35), மீது ஒசூா் மற்றும் கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளி, எப்பகோடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 6 நாள்களுக்கு முன்பு இவா் மாயமானாா். இவரை உறவினா்கள் தேடி வந்தனா். ஆனாலும் கிடைக்கவில்லை. இது தொடா்பாக அவா்கள் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் பேரில் போலீஸாா் மஞ்சுநாத்தை தேடி வந்தனா்.
இந்த நிலையில் மஞ்சுநாத் மாயமான போது கடைசியாக யாரிடம் பேசினாா் என்ற தகவல்களை போலீஸாா் சேகரித்து விசாரித்தனா். இது தொடா்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தியதில் மஞ்சுநாத் கடத்தப்பட்டதும், உளிவீரனப்பள்ளி என்ற இடத்தில் அவா் கொலை செய்யப்பட்டு உடலை அந்தக் கும்பல் புதைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து வியாழக்கிழமை) காலை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு சென்று உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனா்.