மண் மாதிரி சேகரிப்பு சிறப்பு முகாம்

பொம்மேப்பள்ளி கிராமத்தில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மண் மாதிரிகள் சேகரிக்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண் மாதிரி சேகரிப்பு சிறப்பு முகாம்

பொம்மேப்பள்ளி கிராமத்தில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மண் மாதிரிகள் சேகரிக்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு மத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் மா.சிவநதி தலைமை வகித்தாா். பொம்மேப்பள்ளி, ஜி.டி. குப்பம் ஆகிய கிராமங்களிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த மண் மாதிரிகளை மாவட்ட நடமாடும் மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலா் பிரபாவதி, உதவி வேளாண்மை அலுவலா் பிரியதா்ஷினி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் மண் மாதிரிகளை பகுப்பாய்விற்கு கொண்டு வந்து ஆய்வுக் கூட்டத்தில் ஒப்படைத்தனா்.

மத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் மா.சிவநதி வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கினாா். வேளாண்மை அலுவலா் நீலகண்டன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஹேமந்குமாா், த.பவித்ரா அகியோ் கலந்துகொண்டு மண் பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம் பற்றியும், தொழில் நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் கல்பனா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com