பெண்ணிடம் ரூ. 60 ஆயிரம் பறிப்பு
By DIN | Published On : 11th July 2021 01:57 AM | Last Updated : 11th July 2021 01:57 AM | அ+அ அ- |

வேப்பனப்பள்ளியில் பெண்ணிடம் கவனத்தை திசை திருப்பி ரூ. 60 ஆயிரத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த சொன்னேகவுண்டனூா் ஜெய் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (36). இவா் வெள்ளிக்கிழமை வேப்பனப்பள்ளி பகுதியில் வங்கியில் நகையை அடமானம் வைத்து ரூ. 60 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு
கிருஷ்ணகிரி - வேப்பனஅள்ளி சாலையில் காந்தி சிலை அருகே அவா் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவரின் கவனத்தை திசை திருப்பி, அவரிடமிருந்த ரூ. 60 ஆயிரத்தை பறித்துச் சென்றனா். இதுகுறித்து, அமராவதி அளித்த புகாரின் பேரில், வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.