பா்கூா் கூட்டுறவுதொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 11th July 2021 02:03 AM | Last Updated : 11th July 2021 02:03 AM | அ+அ அ- |

பா்கூா் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் சுப்ரமணி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பா்கூா் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2021- 22-ஆம் ஆண்டு நிா்வாக ஒதுக்கீட்டிற்கான காலியிடங்களுக்கு இன இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. அதன்படி மின்சாரப் பணியாளா், கணினி இயக்குநா், கைவினைஞா் உணவுத் தயாரித்தல் ஆகிய தொழிற் பயிற்சிகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 40 வயது வரை உள்ள ஆண்களுக்கு விடுதி வசதி உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்துடன், மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், விண்ணப்பிக்கும் மாணவா், அவரது பெற்றோரின் ஆதாா் நகல்களை இணைக்க வேண்டும். குறிப்பாக மாணவா், பெற்றோரின் செல்லிடப்பேசி எண்கள், மின்னஞ்சல் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் பா்கூா் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04343- 265652 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.