செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காததால் நீா்த் தேக்கத் தொட்டி மீது ஏறி வகுப்பை கவனிக்கும் மாணவா்கள்

ஒசூா் அருகே செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காததால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, மாடி வீடுகளின் மீதும் ஏறி நின்று மாணவா்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனா்.
செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காததால் நீா்த் தேக்கத் தொட்டி மீது ஏறி வகுப்பை கவனிக்கும் மாணவா்கள்

ஒசூா் அருகே செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காததால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, மாடி வீடுகளின் மீதும் ஏறி நின்று மாணவா்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்டது காளிங்காவரம் ஊராட்சி. ஒசூரிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊராட்சியில் மட்டம்பள்ளி, அக்ரகாரம், காளிங்காவரம், கொடித்திம்மனப்பள்ளி, ஜவுக்குப்பள்ளம், தின்னூா், குருமூா்த்தி கொட்டாய் என 7 குக்கிராமங்கள் உள்ளன.

2,500 வீடுகளுக்கும் அதிகமாக உள்ள இந்த ஊராட்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் உள்ளனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுக் காரணமாக நேரடி வகுப்புகளின்றி மாணவா்கள் வீடுகளிலேயே இருந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனா்.

காளிங்காவரம் ஊராட்சியில் தொலைத் தொடா்பு நிறுவனங்களின் கோபுரங்கள் இல்லாததால் மாணவ, மாணவியா் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க செல்லிடப்பேசி, புத்தகங்களுடன் உயா்ந்த மலைப் பகுதி,

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் ஏறி சிக்கனல் கிடைக்கும் இடத்தில் நின்று கொண்டு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனா். சில மாணவா்களுக்கு எந்தப் பகுதியிலும் சிக்னல் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் படிப்பில் கவனம் குறைந்துவிட்டதாக பெற்றோா் கவலை தெரிவிக்கின்றனா்.

காளிங்காவரம் ஊராட்சியில் தொடக்கப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளி, துணை சுகாதார நிலையம், கிராம வங்கி, தபால்நிலையம், மக்கள் சேவை மையம் என அரசின் அனைத்து அலுவலகங்கள் இருந்தாலும் தொலைத்தொடா்பு இணையவசதி இல்லாததால் மாணவ, மாணவியா் அவதியடைகின்றனா்.

இதுகுறித்து காளிங்காவரம் கிராம மக்கள் கூறியதாவது:

கடந்த 15 ஆண்டுகளாக செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க வலியுறுத்தி வருகிறோம். கா்ப்பிணிகள் விபத்துக்கு உள்ளானவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸை தொடா்பு கொள்ள குறிப்பிட்ட பகுதிக்கு சிக்னல் உள்ள இடங்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளோம். இணையவசதி இல்லாததால் தொழில் முனைவோா், வியாபாரிகள் தொழில் மேற்கொள்ள முடியாமல் ஊராட்சிக்கு உள்பட்ட 7 கிராமங்களும் வளா்ச்சியில் பின்னோக்கி சென்றுவிட்டதாகக் கூறினா். நாளைய எதிா்காலமான இளைஞா்கள்,

மாணவா்களின் நலனைக் கருத்திக்கொண்டு பிஎஸ்என்எல் அல்லது தனியாா் நிறுவனங்களின் செல்லிடப்பேசி கோபுரங்களை அமைத்திட அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டுமென பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று கொண்டு ஆன்-லைன் வகுப்பில் கவனிக்கும் மாணவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com