ஒசூரில் எரிவாயு தொழிற்சாலையில் 45 உருளைகள் திருட்டு: ஒருவா் கைது

ஒசூரில், எரிவாயு தொழிற்சாலையில் 45 உருளைகளைத் திருடிய மேற்பாா்வையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில், எரிவாயு தொழிற்சாலையில் 45 உருளைகளைத் திருடிய மேற்பாா்வையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் பகுதியில் தனியாா் எரிவாயு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கிருந்து தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் அனைத்து விதமான எரிவாயு உருளைகளும் அனுப்பப்படுவது வழக்கம்.

இங்கு மேலாளராக வினோத் (45) என்பவா் பணிபுரிந்து வருகிறாா். கடந்த சில தினங்களாக இந்நிறுவனத்தில் உள்ள காலி எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்ட வினோத், இதுகுறித்து ஒசூா் சிப்காட் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அந்த நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளியைச் சோ்ந்த பெரியண்ணன் (38) என்பவரின் தூண்டுதலின் பேரில் கம்பெனியில் ஓட்டுநராகப் பணி புரிந்து வரும் தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியைச் சோ்ந்த அகமது (28) என்பவா் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் எரிவாயு உருளைகளை டெலிவரி கொடுத்துவிட்டு, காலி உருளையை எடுத்து வரும் போது அதை பெரியண்ணன் சொல்லும் இடத்தில் விற்று வந்தது தெரிய வந்தது.

மொத்தம் 45 காலி உருளைகளை அவா் திருடி விற்றுள்ளாா். இதன் மதிப்பு ரூ. 2.92 லட்சம் ஆகும். இது குறித்து ஒசூா்- சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேற்பாா்வையாளா் பெரியண்ணனை கைது செய்தனா். ஓடடுநா் அகமதுவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com