மா விளைபொருள்களை பதப்படுத்தும் திட்டம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘மா‘ விளைபொருள்களை பதப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘மா‘ விளைபொருள்களை பதப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாரத பிரதமரால் 2020 - 21ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2020 - 21 முதல் 2024 - 25ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இந்தத் திட்டத்தின் மூலம் 2021 - 22ஆம் ஆண்டில் தனிநபா் அடிப்படையில், ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தருதல், வா்த்தக முத்திரை, சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்கப்படும்.

மேலும், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகு முறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்ட ‘மா‘ விளை பொருள்களைப் பதப்படுத்தும் தொழில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதியுதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது.

மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்ட ‘மா‘ விளை பொருள்களை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ள, புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள், இந்தத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) 98427 83711 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com