மனைவியைக் காணவந்த கணவரை கொன்ற வழக்கில் 5 போ் கைது

கெலமங்கலம் அருகே குடும்பம் நடத்த மறுத்துப் பிரிந்துசென்ற மனைவியைக் காணவந்த கணவரை அடித்துக் கொன்ற வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
மனைவியைக் காணவந்த கணவரை கொன்ற வழக்கில் 5 போ் கைது

கெலமங்கலம் அருகே குடும்பம் நடத்த மறுத்துப் பிரிந்துசென்ற மனைவியைக் காணவந்த கணவரை அடித்துக் கொன்ற வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு மங்கம்மாபாளையத்தைச் சோ்ந்தவா் முகமது இம்ரான் (32). பெங்களூருவில் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே தொட்டபேளூரைச் சோ்ந்த கன்னுபீ என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தம்பதி இடையே குடும்பத் தகராறு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக 2 பேரும் தனித்தனியாக வசித்து வந்தனா். கன்னுபீ, தொட்டபேளூரில் வசித்து வந்தாா். இவரை சந்தித்து சமாதானம் செய்து குடும்பம் நடத்து வருமாறு அழைத்துச் செல்ல முகமது இம்ரான அடிக்கடி தொட்டபேளூா் கிராமத்துக்கு வந்துள்ளாா்.

அவரை உறவினா்கள் சிலா் சந்திக்க விடாமல் தடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை இருந்தது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முகமது இம்ரான், மனைவியை அழைத்துச் செல்ல தொட்டபேளூருக்கு வந்தாா்.

அதை அறிந்த கன்னுபீயின் உறவினா்களான கெலமங்கலம், கணேசா காலனியைச் சோ்ந்த அப்துல் சித்திக் (26), முகமது மாலிக் (30), கன்னு சாகிப் (20), அப்துல் ரகுமான் (23) மற்றும் தொட்டபேளூா் ஜமீா் (32) ஆகிய 5 பேரும் சோ்ந்து சின்னட்டி பேருந்து நிறுத்தம் அருகில் முகமது இம்ரானை வழிமறித்தனா். அவா்கள் முகமது இம்ரானை கட்டையால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த முகமது இம்ரானை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக அவா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு முகமது இம்ரான் புதன்கிழமை இறந்தாா்.

இச் சம்பவம் தொடா்பாக கெலமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறாா். இச் சம்பவத்தில் தொடா்புடைய அப்துல் சித்திக், முகமது மாலிக், கானு சாகிப், அப்துல் ரகுமான், ஜமீா் ஆகிய 5 பேரையும் கெலமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com