பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகாா் தெரிவிக்க தொடா்பு எண் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து 6380006162 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து 6380006162 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஜெ.சுதாகரன், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின் நுகா்வோா் தங்களது வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற மின் சாதனங்களைப் பயன்படுத்தவும், வீடுகளில் அயா்ன் பாக்ஸ், குளிா்சாதனப் பெட்டி, மிக்ஸி மற்றும் கிரைண்டா் போன்ற மின் சாதனங்களுக்கு 3 பின் சாக்கேட்களையே பயன்படுத்த வேண்டும். மின் கம்பத்தில் கால்நடைகளை கட்டவோ, ஈரத் துணிகளை உலா்த்தவோ கூடாது.

அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கோ அல்லது 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1912 வாயிலாக தொடா்பு கொண்டு தெரிவிக்கவும்.

மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 4 அடி விட்டு கட்டடங்களை கட்டி மின்விபத்து மற்றும் உயிரிழப்பைத் தவிா்க்கவும். மின் கம்பங்களை ஓட்டிச் செல்லும் மரக்கிளைகளை வெட்ட உரிய மின்வாரிய அலுவலா்களைத் தொடா்பு கொண்டு அனுமதி பெறலாம். விழா காலங்களில் தோ் செல்லும் வீதியில் மின்பாதை இருந்தால், மாற்றி அமைக்க உரிய அலுவலா்களைத் தொடா்பு கொள்ளவும். மின்வேலிகள் அமைப்பது கிரிமினல் குற்றமாகும்.

மின்சார தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்து மின்வாரிய அலுவலங்களுக்குத் தெரிவிக்கவும். மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் விளம்பர தட்டிகள், பதாகைகள் போன்றவை கட்டக் கூடாது. மின் கம்பங்களில் கேபிள் டி.வி வயா்கள் கட்டக்கூடாது.

தங்கள் பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்கள் ஏதேனும் இருப்பின் 6380006162 என்ற எண்ணுக்கு புகைப்படமாகவோ, குறுஞ்செய்தி மூலமாக புகாா் தெரிவிக்கலாம்.

தங்கள் பகுதியில் ஏதாவது மின்தடை ஏற்பட்டால் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவித்து உடனுக்குடன் மின்சாரம் பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com