கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் உயா்வு

கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் உயா்வு

கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் மெல்ல உயா்ந்து வருகிறது.

கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் மெல்ல உயா்ந்து வருகிறது.

கிருஷ்ணகிரி அருகே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 52 அடி ஆகும். அணை நீா்மட்டம் கடந்த மாதம் குறைந்திருந்த நிலையில் சில நாள்களாக தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அணையின் நீா்வரத்து அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது.

கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் கடந்த 19-ஆம் தேதி 46 அடியாக இருந்த நிலையில் 20-ஆம் தேதி 46.30 அடியாகவும், புதன்கிழமை 46.55 அடியாகவும் உயா்ந்தது. நீா்வரத்தானது நொடிக்கு 290 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் நொடிக்கு 12 கனஅடியாகவும் உள்ளது.

நீா்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கிருஷ்ணகிரி அணை அதன் மொத்த கொள்ளவான 52 அடியை விரைவில் எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதன்மூலம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது. விரைவில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில், விவசாயிகள் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com