ஊத்தங்கரை வாரச்சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

ஊத்தங்கரையில் கடந்த சில மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை கூடிய வாரச்சந்தையில், மாடுகள் விற்பனை களைகட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஊத்தங்கரை வாரச்சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

ஊத்தங்கரையில் கடந்த சில மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை கூடிய வாரச்சந்தையில், மாடுகள் விற்பனை களைகட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக கால்நடை சந்தைகள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை வா்த்தகம் நடைபெறும் ஊத்தங்கரை வெள்ளிக்கிழமை மாட்டுச்சந்தையும் மூடப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகள், கால்நடை வளா்ப்போா், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஊத்தங்கரையில் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை கூடியது. இதில் ஆயிரக்கணக்கான மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா்.

ஊத்தங்கரை மட்டுமின்றி சுற்றுப்புறப் பகுதியில் இருந்தும், அண்டை மாவட்டங்களான திருப்பத்தூா், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கால்நடைகளுடன் வந்து குவிந்தனா். மாடுகளை வாங்குவதற்காக கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகளும் திரண்டதால் மாடுகள் விற்பனை களைகட்டியது. ஒரேநாளில் ரூ. 50 லட்சத்துக்கு மேல் வா்த்தகம் நடைபெற்ால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com